இலங்கையின் எரிபொருள் தேவை தொடர்ந்து குறைந்துள்ளது

நாட்டில் எரிபொருளுக்கான தினசரி தேவை தொடர்ந்து குறைவாகவே உள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், நுகர்வு வீழ்ச்சி, எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தும் QR குறியீட்டு முறை மற்றும் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி என்பன தேவை குறைவதற்கு காரணம் என தெரிவித்துள்ளது.

இதேவேளை, உள்நாட்டில் எரிபொருள் விலை அடுத்த சில மாதங்களில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் போர் உச்சக்கட்டத்தின் போது கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்த போதிலும், சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ள நிலையில், அடுத்த சில மாதங்களில் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Latest Articles