இலங்கையின் தலைவிதி நாளை நிர்ணயம்!

நீதியாகவும்,சுதந்திரமாகவும் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி முடிப்பதற்குரிய அத்தனை ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன், வாக்காளர்கள் அனைவரும் தமது ஜனநாயக கடமையை சரிசர நிறைவேற்ற வேண்டும் எனவும் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

அதேவேளை வாக்களிப்பு தினம் மற்றும் அதன் பின்னரான காலப்பகுதியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுலில் இருக்கும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தல் கடமைகளில் சுமார் 63 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலுக்குரிய வாக்களிப்பு நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.

Related Articles

Latest Articles