இலங்கையின் முதலாவது மாணவர் பாராளுமன்றத்தில் மலையக மாணவி!

இலங்கையின் முதலாவது மாணவர் பாராளுமன்ற அங்குரார்ப்பன கூட்டத்தில் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பன்மூர் தமிழ் மகா வித்தியாலய உயர்தர மாணவி மு.சுதர்சனா கலந்துக்கொண்டு பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைப்பெற்ற இலங்கையின் முதலாவது மாணவர் பாராளுமன்ற அங்குரார்ப்பன கூட்டத்தில் இவர் கலந்துக்கொண்டார்.

இவர் பன்மூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் அண்மையில் நடைப்பெற்ற மாணவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.
அதன்பின்னர் வலய மட்டத்தில் நடைப்பெற்ற மாணவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.அதன் பின்னர் மாகாண மட்ட ரீதியில் நடைப்பெற்ற மாணவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவருக்கு கல்வி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இறுதியாக தேசிய ரீதியில் நடைப்பெற்ற மாணவர் பாராளுமன்ற தேர்தலில் உறுப்பினராக அங்கத்துவம் பெற்று கடந்த வாரம் இலங்கை பாராளுமன்றத்தில் நடைப்பெற்ற மாணவர் பாராளுமன்ற அங்குரார்ப்பன கூட்டத்தில் கலந்துக்கொண்டு பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலவாக்கலை பி.கேதீஸ்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles