இலங்கையின் பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில், தற்போது அது 17.5 வீதத்தை எட்டியுள்ளது. இலங்கை வரலாற்றில் பதிவான அதிக பணவீக்க நிலைமை இதுவாகும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் 16.8 வீதமாக இருந்த பணவீக்கம், பெப்ரவரியில் 17.5 வீதமாக அதிகரித்துள்ளது. இம்மாதம் மேலும் அதிகரிப்பைக்காட்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.










