இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது

இலங்கையில் மேலும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 9 பேருக்கும் மற்றும் முன்னைய தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 202 பேருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இதன்படி மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில் பதிவாகியுள்ள மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 607 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இற்றைவரையில் 9 ஆயிரத்து 81 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. இதில் 4 ஆயிரத்து 75 பேர் குணமடைந்துள்ளனர் . 19 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்து 987 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

Related Articles

Latest Articles