ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் – 2022, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கட் கவுன்சில் உறுதி செய்துள்ளது.
ஆசியக் கிண்ண போட்டிகள் இலங்கையிலேயே நடைபெறவிருந்தது. எனினும், பொருளாதார நெருக்கடியால் ஐக்கி அரபு அமீரகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆசியக் கிண்ண தொடரை, இலங்கையில் நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. எனினும், தற்போது இடமாற்றப்படுகின்றது. எனினும், போட்டியை நடத்தும் உரிமை இலங்கை வசமே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.










