இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, யாழ்பாணம், வல்வெட்டித்துறையை சேர்ந்த 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.
இவர்களை மீட்ட மரைன் பொலிஸார், ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைக்கு பின்னர் 8 பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள். தற்போது வரை இலங்கை தமிழர்கள் 103 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிபிடத்தக்கது.
