இலங்கையில் புதிய வகை நுளம்பு கண்டுபிடிப்பு

மருத்துவ ஆராய்ச்சி குழு இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கும் புதிய வகை நுளம்பைக் கண்டுபிடித்துள்ளது.

இலங்கையின் மீரிகம மற்றும் களுத்துறை பிரதேசங்களில் இந்த நுளம்பு இனம் பதிவாகியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் திசானக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில், சுகாதார பூச்சியியல் அதிகாரிகளால் 03 புதிய நுளம்பு இனங்கள் கண்டறியப்பட்டதுடன் மேலும் 04 நுளம்பு இனங்கள் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்டு மரபணு ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles