இலங்கையை தோற்கடித்து தொடரை வென்றது தென்ஆபிரிக்கா!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 2ஆவது ரி-20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

18.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 104 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, 14.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

முதலாவது ரி-20 போட்டியிலும் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles