‘இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக அவிஷ்க குணவர்தன’

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அவிஷ்க குணவர்தன, இ 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டள்ளார்.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு இளையோர் பலரை கொண்டுவருவதில் மிகப் பெரும் பங்காற்றியவர் அவிஷ்க குணவர்தன .

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடருக்குரிய ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக குணவர்தன ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணியின் தலைமை பயிற்சியாளராக குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles