இலங்கை மற்றும் சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதற்கமைய, அந்த அணி 50 ஓவர்கள் நிறைவில் 313 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அந்த அணி சார்பாக துடுப்பெடுத்தாடிய இப்ராஹிம் ஸட்ரான் 162 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் கசுன் ராஜித 3 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 314 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பாக சரித் அசலங்க 83 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 67 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அதற்கமைய, 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் 1 – 1 என்ற கணக்கில் சமநிலையில் நிறைவடைந்துள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக ஒரு சமநிலையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியுடன் ஐசிசி தரவரிசை பட்டியலில் இலங்கை 8 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.










