இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி போராட்டம்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்கம் உள்ளிட்ட மீனவ அமைப்புக்கள் இணைந்து யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் வரை பேரணியாகச் சென்றனர். இதன் போது இந்திய துணை தூதரகத்திற்கு செல்லும் வழியில் பொலிஸார் இடைமறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தூதரகம் முன்பாக பேரணியை செல்லவிடாது வரியல் போட்டு பொலிஸார் இடைமறித்ததுடன் மீனவ அமைப்புக்களின் எட்டு பிரதிநிதிகளை சந்திப்பதற்கு அனுமதி வழங்கினர். இதற்கமைய தூதரகத்திற்குள் சென்ற கிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகள் அடங.கிய மகைரொன்றையும் கையளித்தனர்.

இந் நிலையில் பொலிஸாரால் இடைமறிக்கப்பட்ட போராட்டகார்ர்கள் இலங்கை மீனவர்களின் கடல் வளத்தை அழிக்காதே, தமிழக மீனவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் இந்த நாட்டில் வாழுகி்ன்ற நாங்கள் எங்களது பாதுகாப்பையும் உரிமையையும் வலியுறுத்தி தரையில் போராட்டத்தை நடாத்துகிற போது கம்பிக்கூடுகளை வைத்து எங்களை தடுத்து நிறுத்துகிற இலங்கை படைகள் கடலில் எங்கள் பகுதியில் அத்துமீறி எங்களையே தாக்குகிற இந்திய மீனவர்களை ஏன் தடுத்து நிறுத்த முடியாதுள்ளது என கேள்வி எழுப்பிய மீனவர்கள் எங்களை கட்டுப்படுத்த முன்னர் இந்தியர்களை கட்டுப்படுத்துங்கள் எனவும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles