இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஸ்ரீ ரங்கா ஜெயரத்தினம் தெரிவுசெய்யப்பட்டுள்ளமைக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் ஸ்ரீ ரங்கா ஊடகத்துறையில் நேர்மையாக செயற்பட்டு தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார்.
அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலக்கட்டத்தில் மக்களுக்காக பல பணிகளை ஆற்றியுள்ளார்.
இலங்கையில் கால்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்காக பாடுப்பட்டு கால்பந்து விளையாட்டில் இலங்கையை உலகறிய செய்ய சிறப்பாக பணி ஆற்றுவார் என நம்புவதாக தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.










