சீனாவில் உள்ள பல தனியார் மிருகக்காட்சிசாலைகள் இலங்கையில் உள்ள குரங்குகளைக் கொள்வனவு செய்யக் காத்திருக்கின்றன என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
சீனாவில் சுமார் 20 ஆயிரம் தனியார் உயிரியல் பூங்காக்கள் இருக்கின்றன எனவும் துரதிர்ஷ்டவசமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சுமார் ஒரு லட்சம் செந்நிற குரங்குகளை அனுப்ப தயாராகியிருந்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள் ளார். பெருமளவிலான குரங்குகள் விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்துகின்றன, அதற்காக பாதுகாப்பு அமைச்சும் வனவிலங்கு அமைச்சும் ஒன்றிணைந்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார்










