இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவராக கணபதி கனகராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்று கூடியது. அதன் போது மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின் போதே கணபதி கனகராஜ் வெற்றிப்பெற்றுள்ளார். இவர் மத்திய மாகாண சபை உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது