இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, காலியில் இன்று ஆரம்பமாகின்றது.
திமுத் கருணாரத்ன தலைமையில் இலங்கை அணியும், பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணியும் களம் காண்கின்றன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டங்களின்போது திறமையை வெளிப்படுத்திய இலங்கை அணி, அந்த நம்பிக்கையுடன் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றது. பாகிஸ்தான் அணியும் பலமான நிலையிலேயே உள்ளது.










