இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் 18ஆவது வருட பூர்த்தி விழாவும், ஆன்மீக எழுச்சி விழாவும் எதிர்வரும் 23 ஆம் திகதி (23.12 2023) சனிக்கிழமை காலை 8:30 மணிக்கு கொட்டகலை மாநகரிலே மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இதன்போது சர்வதேச விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதற்கான முழு அளவிலான ஏற்பாடுகளை இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய ஆதீனமாக விளங்குகின்ற திருஞான சம்பந்தர் ஆதீனத்தின் , ஆன்மீக கலாநிதி ஸ்ரீலஸ்ரீ சிவாகிர தேசிக சுவாமிகள் முன்னிலையிலே நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
மேலும் இந்நிகழ்வில் ‘வேர்ல்ட் ஆக்சன் பவுண்டேஷன்’ நிறுவனர் சுபாஷ் சுந்தர்ராஜ் கனடாவில் இருந்து விசேட பிரதிநிதியாக விசேட விருந்தினராக கலந்து சிறப்பிக்க உள்ளார்.