இலங்கை மாணவர்களை சீனாவிற்கு அனுப்புதல் l பிரதமர், சீன அமைச்சருடன் பேச்சு

சீன வெளிவிவகார அமைச்சருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை, முதலீடுகள், கொவிட் நிவாரண உதவித் திட்டங்கள், கொவிட் வைரஸ் பரவலுக்கு பின்னரான தயார் நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இலங்கையிலுள்ள மருத்துவ மாணவர்களை சீனாவிற்கு அனுப்புகின்றமை குறித்தும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles