சீனாவின் இராணுவ கப்பலொன்று இம்மாதத்துக்குள் இலங்கை வரவுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“சீன இராணுவ பயிற்சி கப்பலொன்றே நாட்டுக்கு வருகின்றது. அது ஆராய்ச்சிக் கப்பல் அல்ல. இதற்கு முன்னர் பல நாடுகளில் இருந்து இவ்வாறு இராணுவ பயிற்சி கப்பல்கள் வந்துள்ளன.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.