பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 70 வீதமான காட்சிகள் இலங்கையில் படமாக்கப்படவுள்ளது.
குறித்த படத்தில் 30 வீதமான பணிகள் ஏற்கனவே நிறைவுபெற்றுள்ள நிலையில் எஞ்சிய 70 வீதம் ரன்மினிதன்ன சினிமா கிராமம் , தம்புள்ள உட்பட மேலும் சில இடங்களில் ஒளிப்பதிவு செய்யப்படவுள்ளது என தெரியவருகின்றது என்று சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்காக நடிகை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நடிகர்கள் இலங்கை வரவுள்ளனர் எனவும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகும். 30 வீதமான காட்சிகள் தாய்லாந்தில் எடுக்கப்பட்டுள்ளது.