இலங்கை வருமாறு கமல்ஹாசனுக்கு இதொகா அழைப்பு!

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசனுக்கு, இதொகாவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண புதிய ஆளுநராக நியமனம் பெற்றுள்ள செந்தில் தொண்டமானுக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

தனது சேவைக் காலத்தில் மக்களின் தேவைகளை அறிந்து எண்ணற்ற சேவைகளை மக்களுக்குச் செய்ய வாழ்த்துத் தெரிவிப்பதாக கமல்ஹாசன் மேலும் தெரிவித்துள்ளார்.

அதற்கு நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான், கமல்ஹாசனை கிழக்கு மாகாணத்திற்கு வருகை தருமாறு அழைப்பும் விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles