இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா, தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடனும் பேச்சு நடத்துவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதன்படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மேலும் சில தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.
அபிவிருத்தி, அரசியல் தீர்வு திட்டம், இந்திய உதவி திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.
