தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிரூட் தொழிற்சாலை பகுதிக்கு அருகில் நேற்று (13.11.2023) மாலை இடம்பெற்ற கோஷ்டி மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் .
கிறேட் வெஸ்டன் பகுதியை சேர்ந்த சிவஞானம் சஜ்ஜீவன் (22) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபருடன் நீண்டநாள் பகை கொண்டிருந்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரால் ஏற்பட்ட குழு மோதலில் இந்த கத்தி வெட்டு சம்பவம் நடந்தேறியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேநேரத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்
தலவாக்கலை நிருபர் – கௌசல்யா