அநுராதபுரம் – மதவாச்சியில் வைத்து 23 வயதான இளைஞர் பொலிஸாரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் சார்ஜன்ட் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 7 ஆம் திகதி உத்தரவை மீறி பயணித்த லொறியை பின்தொடர்ந்து சென்று நிறுத்தி, அதிலிருந்தவர்களை கைது செய்ய முற்பட்டபோது, இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
தாக்குதலில் காயமடைந்த இளைஞர், மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது, அவரது விதையொன்று அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










