இழப்பீட்டுக்காக வெளிநாட்டு நீதிமன்றை நாடும் அரசின் இனவாத முகம் அம்பலம் – சுமந்திரன்

” உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது (TRC) சர்வதேச பொறிமுறையாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும். அவ்வாறு இல்லாவிட்டால் குழு அமைப்பதில் பயன் இல்லை.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (11) உரையாற்றிய அவர், ” 2009 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில்தான் மிக மோசமான படுகொலைகள் அரசால் அரங்கேற்றப்பட்டன.” எனவும் சுட்டிக்காட்டினார்.

” இன்றைக்கும் சர்வதேச நீதியை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களுக்கு, ” நாங்கள் சர்வதேசம் செல்ல தயாரில்லை எனவும், உள்நாட்டு பொறிமுறைக்கமைய விடைகொடுப்போம் எனவும் கூறிவரும் அரசு, இன்னும் ஒரு விடையையும் கொடுக்காமல் உள்ளது. ஆனால் இழப்பீட்டுக்காக வெளிநாட்டு நீதிமன்றத்துக்கு செல்கின்றது, இது உங்களுக்கடைய (ஆட்சியாளர்களின்) இனவாத முகத்தை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றது.” – எனவும் சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதியை இன்று சந்திக்கின்றோம். TRC பற்றியும் (உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு) கலந்துரையாடப்படும்.
TRC என்பது சர்வதேச பொறிமுறையாக இருந்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என எடுத்துரைக்கவுள்ளோம். அவ்வாறு இல்லாவிட்டால் அதில் பயன் இருக்காது.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles