இவ்வாண்டு இறுதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் நடத்தப்பட்டால் அது சுகாதார வழிமுறைகளை பின்பற்றியே மேற்கொள்ளப்படும்.
தேர்தல் நடத்துவது குறித்து உத்தியோகத்தர்களை பயிற்றுவித்தல், வாக்குச் சாவடிகள் நிறுவுதல் குறித்த ஆரம்ப கட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்தல் காலத்தில் சட்டங்களை அமுல்படுத்துவது குறித்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டல் செய்யும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.” – எனவும் அவர் கூறினார்.
