இவ்வாரத்துக்குள் தீர்வை காணுங்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அழைப்பு

“நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடையக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அதேபோல உணவு தட்டுப்பாடு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கு ஜனநாயக வழியில், அரசமைப்பு ரீதியாக பொதுவானதொரு வேலைத்திட்டத்தை இவ்வாரத்துக்குள் உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள் – அதனை செயற்படுத்துங்கள்.”

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவசர கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன.
நாடாளுமன்றம் இன்று (06.04.2022) முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்புவேளையின்போதே, மக்களின் சார்பில் தான் இந்த கோரிக்கையை விடுப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles