இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் அழிக்கப்படும் – ஈரான் எச்சரிக்கை

” ஈரான்மீது எந்தவொரு சிறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் அழிக்கப்படும்.” – என்று ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் நாட்டில் வருடாந்திர இராணுவ தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி தலைநகர் தெஹ்ரானில் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டின் அதிபர் இப்ராகிம் ரெய்சி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் நகரின் உயரே பறந்து தங்களது படை பலம் என்னவென பறைசாற்றின. இதேபோன்று, ஈரானின் நீர்மூழ்கி கப்பல்களும் கடலில் பயணித்தன.

இதனை முன்னிட்டு அதிபர் ரெய்சி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசும்போது, ஈரானின் அணு ஆயுத மற்றும் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்த கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

எதிரிகள் அதிலும் குறிப்பிடும்படியாக, இஸ்ரேல் அரசுக்கு தெரிவிக்கப்படும் செய்தி என்னவென்றால், எங்களது நாட்டுக்கு எதிராக எந்தவொரு சிறு நடவடிக்கையும் எடுக்கப்பட்டால், அதற்கு எங்களுடைய ஆயுத படைகளிடம் இருந்து கடுமையானதொரு பதிலடி கிடைக்க பெறும். இதன்பின் ஹைபா மற்றும் டெல் அவிவ் ஆகிய நகரங்கள் தரைமட்டம் ஆக்கப்படும் என்று கூறியுள்ளார். இஸ்ரேலின் முக்கிய வர்த்தக நகரங்களில் ஒன்றாக டெல் அவிவ் இருந்து வருகிறது. இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு சமீபத்தில் தேசிய அளவிலான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, இன்றைய ஈரானை நாஜி காலத்தில் இருந்த ஜெர்மனியுடன் ஒப்பிட்டு பேசினார்.

யூத மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டார். ஈரானின், ராணுவ படைகள் மத்திய கிழக்கு பகுதி வரை விரிந்து பரவியுள்ளன. லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹிஜ்புல்லா பயங்கரவாத குழுக்களுக்கு ஈரானின் ஆதரவும் காணப்படுகிறது. ஈரானின் படைகள் அமெரிக்க கடற்படையுடன் அவ்வப்போது மோதல்களில் ஈடுபடும் சூழலும் பதற்ற நிலையை உண்டு பண்ணுகிறது. இதனை தொடர்ந்தே ஈரான் அதிபர் எச்சரிக்கை விடும் வகையில் பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அதிபர் ரெய்சி, மத்திய கிழக்கு பகுதியில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles