இஸ்ரேல் அழிக்கப்படவேண்டிய புற்றுநோய் போன்றது: ஈரான் உச்ச தலைவர் விளாசல்!

 

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமெனி மீண்டும் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ளார்.

இஸ்ரேல் அதன் வேர்களிலிருந்து அழிக்கப்பட வேண்டிய புற்றுநோய் கட்டி போன்றது என்று காமேனி சுட்டிக்காட்டினார்.

‘ இஸ்ரேல் அமெரிக்காவின் செல்ல பிராணி போல இருக்கின்றது. அதன் உத்தரவுகளின்படி விளையாடுகின்றது.

மேலும், ஈரானில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதே இஸ்ரேலின் குறிக்கோள். போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும் இஸ்ரேலை நம்ப முடியாது. எந்த நேரத்திலும் ஈரான் தாக்கப்படலாம். அவ்வாறு நடந்தால், கடந்த மாதத்தை போல கடுமையாக பதிலடி கொடுப்போம்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவும் அதன் செல்லப்பிராணி இஸ்ரேலும் சண்டைக்கு வந்தாலும், ஈரானுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் ஒரு அடி பின்வாங்க வேண்டும். பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்தால், இஸ்ரேல் இன்னும் கடுமையான அடிகளைச் சந்திக்கும். மத்திய கிழக்கில் அமெரிக்கா இஸ்ரேலை ஊக்குவித்து வருகிறது. இஸ்ரேலின் செயல்களுக்கு அமெரிக்கா முழுப் பொறுப்பேற்க வேண்டும்.” – என ஈரான் உச்ச தலைவர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 12 நாட்கள் கடுமையான மோதல் நிகழ்ந்தது.

ஈரானில் அணு விஞ்ஞானிகளையும் ஈரானில் நூற்றுக்கணக்கான மக்களையும் இஸ்ரேல் குண்டுவீசி கொன்றது. பதிலுக்கு ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிலும் கடும் சேதங்கள் ஏற்பட்டன.

இடையில் அமெரிக்காவும் ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை தாக்கியது. இதன் பாதிப்புகள் இன்னும் மதிப்பிடப்படவில்லை. இருப்பினும் அணுசக்தி நிலையங்களை முற்றிலும் அழித்ததாக அமெரிக்கா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles