இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 100 குழந்தைகள் உட்பட 4000 பேர் பலி

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்படை கடந்த 27-ம் தேதி நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். இதன் பிறகு இரு தரப்புக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து உள்ளது.

இஸ்ரேல் விமானப் படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் 2,000-க்கும் மேற்பட்ட முகாம்கள் அழிக்கப்பட்டு உள்ளன. 440 ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

இஸ்ரேல் தாக்குதலில் லெபனான் முழுவதும் 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 100 பேர் குழந்தைகள். 3,100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தரைமட்டமாகி உள்ளன.

இஸ்ரேல் போர் விமானங்கள், ட்ரோன்களின் தாக்குதலுக்கு அஞ்சி லெபனான் மக்கள் அண்டை நாடான சிரியாவுக்கு தப்பிச் செல்கின்றனர். ஆனால், பெய்ரூட்- டமாஸ்கஸ் சாலையின் முக்கிய பாலங்கள் மற்றும் முக்கிய இடங்களை இஸ்ரேல் அழித்ததால் லெபனான் மக்கள் சிரியாவுக்கு தப்பிச் செல்ல முடியாத சூழல் உருவாகி உள்ளது.

இஸ்ரேல் எல்லையை ஒட்டிய லெபனான் பகுதிகளில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் சுரங்கப் பாதைகளில் இருந்து இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.

தற்போது லெபனான் எல்லைக்குள் தரைவழியாக நுழைந்துள்ள இஸ்ரேல் வீரர்கள் சுரங்கப் பாதைகளை கண்டறிந்து குண்டுகள் மூலம் தகர்த்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை 250 மீட்டர் நீளம் கொண்ட சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் வெடிகுண்டுகள், ஏவுகணைகளை பதுக்கி வைத்திருந்தனர். அவை பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஜபாலியாவில் ஹமாஸ் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை இரவு ஜபாலியா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கிகள் நுழைந்தன. நள்ளிரவு முதல்அதிகாலை வரை ஹமாஸ் தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டனர். அவர்களின் பதுங்கு குழிகள், ஆயுதங்கள் அழிக்கப்பட்டன.

காசாவின் டெய்ர் அல்-பலாஹ் பகுதியில் உள்ள மசூதியில் ஹமாஸ் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. அந்த மசூதி மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டுகளை வீசின. இதில் 19 பேர் உயிரிழந்தனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles