இஸ்ரேல் இராணுவம் மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 17 ஆம் திகதி ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய 5,000 பேஜர்கள் ஒரே நேரத் தில் வெடித்துச் சிதறின.
இதில் 879 தீவிரவாதிகள் உயிரிழந்திருப்பதாகவும் 4,000 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இந்த சூழலில் இஸ்ரேல் ராணுவத்தின் போர் விமானங்கள் வியாழக்கிழமை நள்ளிரவு முதல்வெள்ளிக்கிழமை அதிகாலை வரை லெபனானில் ஹிஸ்புல்லாமுகாம்களை குறிவைத்து மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தியது.
இதில் ஹிஸ்புல்லாவின் 100 ராக்கெட் ஏவுதளங்கள் மற்றும் 1,000 ராக்கெட் பேரல்கள் அழிக்கப்பட்டன. ஆயுத கிடங்குகளும் அழிக்கப்பட்டன.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது,
“இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தயாராகி வந்தனர். இதை தடுக்க அவர்களின் ஏவுகணை தளங்கள்,ஆயுத கிடங்குகளை முழுமையாக அழித்துள்ளோம்’’ என்று தெரிவித்தன.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா நேற்று கூறும்போது, “இஸ்ரேல் வரம்பு மீறி செயல்படுகிறது. அந்த நாட்டு ராணுவம் லெபனான் மண்ணில் கால் வைத்தால் மிகப்பெரிய போர் வெடிக்கும்’’ என்று தெரிவித்தார்.
அதேவேளை, லெபனான் தலைநகரின் மீது இஸ்ரேல்; மேற்கொண்ட தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார்.