இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாவிட்டால் நிலைமை மோசமாகும் – இறுதி எச்சரிக்கையை விடுத்தது ஈரான்

காஸாமீது இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால் மத்திய கிழக்கில் நிலைமைகள் கட்டுக்குள் அடங்காமல் போய்விடும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிர்-அப்துல்லாஹியன் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு இராணுவ உதவி வழங்கியதற்காக அமெரிக்காவையும் பழிகூற வேண்டியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் “இஸ்ரேல் வீரர்கள் தங்கள் நாட்டு உயிர்களுக்காக போர்களத்தில் நிற்கின்றனர்” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருக்கிறார்.

ஹமாஸ் மற்றும் லெபனானின் ஹெஸ்புல்லா ஆகிய இரு அமைப்புகளையும் ஈரான் ஆதரிக்கின்றது.

இந்நிலையில் “அமெரிக்கா மற்றும் அதன் பிரதிநியான இஸ்ரேலை எச்சரிக்கிறேன். காஸாவில் மனிதத்துக்கு எதிராக நடைபெற்று வரும் குற்றங்களையும் இனப்படுகொலையையும் நிறுத்தாவிட்டால், என்ன வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். பிறகு இந்த பகுதியில் நிலைமைகள் கட்டுக்குள் இருக்காது” என்று செய்தியாளர் சந்திப்பில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிர்-அப்துல்லாஹியன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles