இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டுவாருங்கள் – ஐ.நாவிடம் சஜித் கோரிக்கை

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டுவர அவசர பாதுகாப்பு சபைக் கூட்டத்தை கூட்டுமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” காசா பகுதியில் உள்ள Al-Ahli Arab வைத்தியசாலைமீது நேற்று (நேற்றுமுன்தினம்) நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே தற்போது நடந்து வரும் போரில் ஆயிரத்து 400 இஸ்ரேலியர்களும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலை மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட இப்படியான அனைத்து சம்பவங்களும் படுகொலையாகும்.

இந்த போர் சூழ்நிலையை சமரசப்படுத்த ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையிலான கூட்டத்தை உடன் கூட்டி, அத்தரப்புகளின் தலையீட்டுடன் இந்த பயங்கரவாதத்தையும் , அரச பயங்கரவாதத்தையும் உடனடியாக நிறுத்தக் கோருவதற்கான பிரேரணையை முன்வைக்குமாறும் கோருகின்றேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles