இஸ்ரேல் பிரதமரின் உரையின்போது உலக தலைவர்கள் வெளிநடப்பு!

 

ஐ.நாவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் அங்கிருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் அவையை விட்டு வெளியேறினர்.

தனது உரையை நிகழ்த்துவதற்காக நெதன்யாகு மேடைக்கு வந்த சில நொடிகளில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவையில் இருந்த பல்வேறு நாட்டுத் தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் தங்கள் இருக்கைகளை விட்டு உடனடியாக எழுந்து கூட்டாக வெளிநடப்பு செய்தனர்.

இதனால் நெதன்யாகு உரையின் போது பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெதன்யாகுவின் உரை காஸா எல்லையில் ஒலிப்பெருக்கிகள் வாயிலாக நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Latest Articles