இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஈரான் உயர் தலைவரான அயத்துல்லா அலி கமேனி வலியுறுத்தியுள்ளார்.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் இதுவரை நடத்திய தாக்குதலில் 1,700 குழந்தைகள் உட்பட 42000 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் காசா பகுதியில் மனித குலத்திற்கே எதிரான போர் குற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் இதற்கு காரணமான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகும், முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவ் காலண்ட் மற்றும் ஹமாஸ் தலைவர் முகமது தயிப் ஆகியோருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் இருவருக்கும் பிடியாணை பிறப்பித்தது. இதற்கு எதிராக இஸ்ரேல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் அதனை சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர்.
இந்த நிலையில் இசையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஈரான் உயர் தலைவரான அயத்துல்லா அலி கமேனி கூறியுள்ளார்.
ஈரானின் துணை இராணுவப்படையின் தன்னார்வப் பிரிவான பாசிஸ் படையினருடன் பேசிய அவர்,”காசா, லெபனானில் சியோனிச ஆட்சி போர் குற்றம் செய்திருக்கிறது. தற்போது அவர்களை கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து இருக்கிறது. இது மட்டும் போதாது. நெதன்யாகு மற்றும் சியோனிச ஆட்சி கிரிமினல் தலைவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்.” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.