இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டுவரும் நிலையில், மனிதாபிமான போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷ்யா முன்வைத்த யோசனை இரண்டாவது முறையும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமை கொண்டுள்ள அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த யோசனையை நிராகரித்தது.
ரஷ்யாவின் யோசனைக்கு சீன உள்ளிட்ட நாடுகள் ஆதரவு வழங்கின. எனினும், வீட்டோ அதிகாரம்மூலம் அதனை அமெரிக்கா வலுவிழக்க செய்துள்ளது. கடந்த ஒக்டோபர் 16 ஆம் திகதியும் ரஷ்யாவால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி தோற்கடிக்கப்பட்டது.
இஸ்ரேலின் உக்கிர தாக்குதலால் பாலஸ்தீனத்தில் 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.










