அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர் சுப்ரமணியம் கதிர்சசெல்வன், தான் வகித்து வந்த பிரதேச சபை தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. அத்துடன், தனது இராஜினாமா கடிதத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமானிடம் இன்று அவர் கையளித்துள்ளார்.
தான் பதவி விலகியமையானது தனது தனிப்பட்ட தீர்மானமே என்றும் எவரும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.











