இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச்செயலாளரும் அமைச்சருமான எஸ். செல்லச்சாமி தனது 95 ஆவது வயதில் இன்று (01) காலமானார்.
சுகவீனமடைந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கொழும்பிலுள்ள வீட்டிலேயே சிகிச்சைபெற்றுவந்த அவர் இன்று நண்பகல் காலமானார் என உறவினர்கள் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக விளங்கிய செல்லசாமி, இ.தொ.காவின் நீண்டகாலம் பொதுச்செயலாளர் பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1965 ஆம் ஆண்டிலேயே எஸ். செல்லச்சாமி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 1992 வரை அவர் அப்பதவியில் நீடித்தார். 27 ஆண்டுகளாக அப்பதவியில் நீடித்தவர் என்ற பெருமையும் சாரும்.
இ.தொ.காவின் அரசியல் செயற்பாட்டை தலைநகரிலும் கோலோச்சவைத்தனர்.