இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இரண்டு தலைமை பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு தலைவர்களுக்கும் யாப்பு ரீதியாக சம அதிகாரங்களும் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதி இ.தொ.காவின் தேசிய சபை கூடவுள்ளது. இதில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவின் பின்னர் வெற்றிடமாகியுள்ள தலைவர் பதவிக்கான நியமனம் இடம்பெறவுள்ளது.
என்றாலும் தலைமைத்துவ வெற்றிடம் இரண்டாக பிரிக்கப்பட்டு தலைவர் மற்றும் தவிசாளர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு பதவிகளுக்கும் சம அளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய சபையின் முடிவின் பிரகாரம் இந்த இரண்டு பதவிகளுக்கும் இ.தொ.காவின் உபத் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரம் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி மற்றும் மலையக மக்கள் எதிர்கொண்டுள்ள கடும் பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் மக்களின் எதிர்கால நலனை அடிப்படையாக கொண்டு தலைமைத்துவ பதவிக்கான வெற்றிடம் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளதாக கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.










