இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்றைய தினம் கொட்டகலை CLF வளாகத்தில் நுவரெலியா மாவட்ட தோட்ட தலைவர்கள், தலைவிகள் மற்றும் வாலிப காங்கிரஸின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன் போது கலந்துக்கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1000 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்று தந்தமையோடு அவர்களை பொருளாதார ரீதியிலே முன்கொணரவும் அவர்களின் தொழிலை கௌரவமிக்க தொழிலாக ஆக்குவதோடு அவர்களின் குழந்தைகளின் கல்வித்துறை வளர்ச்சிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எப்போதும் முன்னின்று செயற்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இச் சந்திப்பின் போது நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் இ.தொ.கவின் பிரதி தலைவர் அனுஷியா சிவராஜா மற்றும் தேசிய அமைப்பாளர் ராஜதுரை இ.தொ.காவின் உப தலைவர்களான சக்திவேல்,கணபதி கனகராஜ்,பிலிப்குமார் இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதேச,நகர சபைகளின் தலைவர்கள் காரியாலய உத்தியோகஸ்தர்கள் மாவட்ட தலைவர் தலைவிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.