இ.போ.சவில் வேலை வாய்ப்பு – மலையக இளைஞர்களே பயன் பெறுங்கள்!

இலங்கை போக்குவரத்துச் சபையில் ஏற்பட்டிருக்கும் சாரதிகள் மற்றும் நடாத்துனர்கள் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆகவே, எமது சமூக இளைஞர்கள் இது விடயத்தில் கூடிய கவனம் செழுத்தி, கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொள்ளும்படி, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையொன்றின் மூலம் கேட்டுள்ளார்.

தொடர்ந்து அவ் அறிக்கையில்’

சாரதிகள்

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் இரு படங்களில் திறமைச்சித்திகளுடன், ஆறு பாடங்களில் இரு தடவைக்கு மேற்படாத வகையில், சித்தி பெற்றிருக்க வேண்டும். 18 வயதிற்கும் 45 வயதிற்கும் உள்ளடங்கி இருக்க வேண்டும். 46 கிலோ கிராம் எடையுடன் கூடிய, ஐந்து அடியும் மூன்று அங்குல உயரமுடையவராக இருக்க வேண்டும். மூன்று வருடங்களுக்கு முன்பாகப் பெற்ற கடின வாகன செழுத்துனராக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனமொன்றில், சேவையாற்றி இருப்பமை மேலதிக தகைமையாகக் கருதப்படும்.

நடத்துனர்கள்

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் கணிதம், தமிழ் மொழி உள்ளிட்டு இரு பாடங்களில் திறமைச்சித்தியுடன், இரு தடவைகளுக்கு மேற்படாத வகையில், ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும். 18 வயதிற்கும் 45 வயதிற்கும் உள்ளடங்கி இருக்க வேண்டும். 46 கிலோகிராம் எடையுடன் கூடிய 18 வயதிற்கும் 45 வயதிற்கும் உள்ளடங்கி இருக்க வேண்டும். ஐந்து அடி உயரமிருக்க வேண்டும். சிறந்த சுகதேகியாக இருக்க வேண்டும். பிரயாணிகள் போக்குவரத்துச் சேவையில், நடத்துனராக சேவையாற்றிருப்பின் அச் சேவை மேலதிக தகைமையாகக் கருதப்படும்.

இவ்விரு பதவிகளும் ஒப்பந்த அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படவுள்ளன. ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்திற்கமைய, குறைந்த வருமானமுள்ள குடும்பத்தினருக்கு விசேட கவனம் செழுத்தப்படவுள்ளது.

பூர்த்தி செய்யப்படும் விண்ணப்பங்கள், பிரதான மனித வளப்பிரிவு முகாமையாளர், ஸ்ரீ லங்கா போக்குவரத்துச் சபை, இலக்கம் 200, கிருள வீதி, நாரறேன்பிட்ட, கொழும்பு – 05 என்ற முகவரிக்கு 15.02.2022க்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்பப்படும் கடித உறையில் இடது பக்க மேல் மூலையில் பதவியின் பெயர் குறிப்பிடல் வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles