இ.போ.ச பஸ் வண்டியில் டீசல் திருட முற்பட்ட நபர் கைது

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பசறையிலிருந்து மாத்தறைக்கு செல்லும் பஸ் வண்டியின் டீசல்  கொள்கலன்  (tank) மூடியை உடைத்து டீசல் திருட முற்பட்ட வேளை நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பசறை பஸ் தரிப்பிடத்தில் இன்று காலை 6.30 மணிக்கு மாத்தறைக்கு செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றில், பதுளை பசறை  நகர்களுக்கிடையில் சேவை புரியும்  தனியார் பஸ் ஒன்றில் நடத்துனராக கடமை புரியும் 35 வயதுடைய நபர் ஒருவர் டீசல் கொள்கலனின் மூடியை உடைத்து டீசலை திருட முற்பட்ட வேளை பஸ் தரிப்பிடத்தின் காவலாளியினால் பிடிக்கப்பட்டு காவல் கடமைகளில் ஈடுபட்டிருந்த  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்றைய தினம் நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்காக நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

ராமு  தனராஜா

Related Articles

Latest Articles