ஈரானின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா கைப்பற்ற ஒருபோதும் இடமளியோம்

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் நடைமுறையில் இருந்தாலும், உலகின் பல்வேறு நாடுகள் ஈரானுடன் தொடர்ந்து ஒத்துழைத்து வருவதாக அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியான் தெரிவித்துள்ளார்.

ஈரானின் தேசிய ஏற்றுமதி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் கைப்பற்றுவதாக வெளிப்படையாக அச்சுறுத்தியதாகக் குறிப்பிட்டார்.

எனினும், ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை ட்ரம்ப் ஒருபோதும் கைப்பற்ற அனுமதிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

“எமது தலைவரைப் படுகொலை செய்வதன் மூலம் நாட்டைச் சிதறடித்துவிடலாம் என அவர்கள் கருதினர்” என்றும் பெஷேஷ்கியான் கூறியதாக ஈரானின் பார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles