“ ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை. அது தேவையற்ற குழப்பத்தை உருவாக்கும்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட ஒரு பதிவில்,
“ஆட்சி மாற்றம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானதாக இருக்காது. ஆனால், தற்போதைய ஈரானிய ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தப் பதிவை வெளியிட்ட ஓரிரு தினங்களிலேயே ட்ரம்ப் இப்படி மாற்றி பேசியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.