ஈரானில் மலைக்குள் அணுசக்தி தளம்: அழிக்க அமெரிக்க உதவியை கோருகிறது இஸ்ரேல்!

இஸ்ரேல் விமானப் படை தாக்​குதலில் ஈரானில் இது​வரை 639 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 2 ஆயிரத்துக்கு மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​துள்​ளனர். ஈரானின் முக்​கிய அணு சக்தி தளங்​கள், எண்​ணெய் வயல்​களும் அழிந்​துள்​ளன.

கடந்த 13-ம் திகதி அதி​காலை ஈரான் மீது இஸ்​ரேல் விமானப் படை திடீர் தாக்​குதல் நடத்​தி​யது. இரு நாடு​களிடையே 8-வது நாளாக இன்றும் போர் நீடிக்கின்றது.

கடந்த 7 நாள்களில் ஈரான் தலைநகர் தெஹ்​ரான் உட்பட அந்த நாட்​டின் ஆயிரத்து 100 இடங்​கள் மீது இஸ்​ரேல் போர் விமானங்​கள், ட்ரோன்​கள் தாக்​குதல் நடத்தி உள்​ளன.

குறிப்​பாக ஈரானின் அணு சக்தி தளங்​கள், ஆயுத உற்​பத்தி ஆலைகள், எண்​ணெய் வயல்​கள் மீது மிகப்​பெரிய தாக்​குதல் நடத்​தப்​பட்டு இருக்​கிறது. இதில் ஈரானின் 20 அணுசக்தி தளங்​கள், 16 எண்​ணெய் வயல்​கள் அழிக்​கப்​பட்டு இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

ஈரானின் போர்டோ நகரில் மலைக்கு கீழே சுமார் 90 மீட்​டர் ஆழத்​தில் அந்த நாட்​டின் மிக முக்​கிய அணுசக்தி தளம் செயல்​படு​கிறது. இந்த தளம் மீது இஸ்​ரேல்விமானப் படை தாக்​குதல் நடத்​தி​யது. ஆனால் அதனை அழிக்க முடிய​வில்​லை.

அமெரிக்க இராணுவத்​தால் மட்​டுமே பூமியைதுளைத்து போர்டோ அணுசக்தி தளத்தை அழிக்க முடி​யும் என்று கூறப்​படு​கிறது.
இதற்குரிய உதவியை இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் நிமித்தமே மத்திய கிழக்கை நோக்கி கப்பல்களும், போர் விமானங்களும் களமிறக்கப்பட்டுள்ளன.

ஈரான் ராணுவ தரப்​பில் இஸ்​ரேலை குறி​வைத்து இது​வரை 400 ஏவு​கணை​கள் வீசப்​பட்டு உள்​ளன. மேலும் 1,000 ட்ரோன்​கள் மூல​மும் தாக்​குதல்​கள் நடத்​தப்​பட்டு உள்​ளன. இஸ்ரேலிலும் பலர் உயிரிழந்துள்ளனர். எனினும், உயிரிழப்புகள் தொடர்பில் சரியான எண்ணிக்கை இன்னும் வெளியாகவில்லை.

Related Articles

Latest Articles