” ஈரான் தலைவர் நன்றியற்றவர். அவரை படுகொலையில் இருந்து காப்பாற்றினேன்.” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
” அமெரிக்காவின் முகத்தில் ஈரான் அறைந்துள்ளது. அமெரிக்கா தலையிடாவிட்டால் இஸ்ரேல் அழிந்து இருக்கும். இதனை உணர்ந்ததால் தான் அமெரிக்க இந்த போரில் தலையிட்டது.” – என ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி போர் நிறுத்தத்துக்கு பிறகு கூறி இருந்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட டிரம்ப்,
” ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனியை படுகொலையில் இருந்து காப்பாற்றினேன். அவர் நன்றியில்லாமல் இருக்கிறார். அணு ஆயுதங்களை தயாரிக்க முயன்றால், ஈரானில் குண்டுகள் வீச உத்தரவிடுவேன்.
அயதுல்லா அலி கமேனி எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பது எனக்கு சரியாகத் தெரியும். உலகின் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த இஸ்ரேல் அல்லது அமெரிக்க ஆயுதப் படைகள் அவரது வாழ்க்கையை முடிக்க அனுமதிக்க மாட்டேன்.” – எனவும் அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.