ஈரான் வெளிவிவகார அமைச்சர் டாக்கடர் ஹுசைன் அமிர் அப்துல்லா இன்று, உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகிறார். அவரும், ஏனைய தூதுக்குழுவினரும் பெப்ரவரி 19-21 வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என்று தெரிய வருகிறது.
கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஈரான் விஜயத்தின்போது ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமிர் அப்துல்லாஹியனுடன் இரு தரப்பு பேச்சு நடாத்தியத்தைத் தொடர்ந்து இந்த விஜயம் மேற்கொள்ளவுள்ளப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விஜயத்தின் போது ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்திக்க உள்ளார். மேலும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வெளிவிவகார அமைச்சில் அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ பேச்சுகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இஸ்ரேலிய போக்குவரத்து அமைச் சர் மிரி ரெகெவ் கொழும்புக்கு விஜயம் செய்த சில நாள்களே ஆகியுள்ள நிலையிலேயே இவரது வருகை இடம் பெறவுள்ளது.
