இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப் பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அணிசேரா மாநாட்டுக்காக உகண்டா வின் தலைநகர் கம்பாலாவில் தற்போது ரணில் முகாமிட்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி தொடர்பான தேர்தல் முடிவுகள் தொடர்பில் அவருக்கு நேற்று முன்தினம் தெரியப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே சிறீதரனுக்கு நேற்றுமுன்தினம் பிற்பகல் 3 மணியளவில் தொலைபேசி அழைப்பெடுத்து அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமைச்சர்கள், பெரும்பான்மைக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறீதரனுக்குத் தமது வாழ்த்தைத் தெரிவித்துள்ளனர்.










