“உக்ரைன் போர்க்களம்”- 1300 உக்ரைன் படையினர் பலி

ரஷ்ய படையெடுப்பின் ஆரம்பத்தில் இருந்து சுமார் 1,300 உக்ரைன் துருப்புக்கள் கொல்லப்பட்டதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் இந்த தகவலை வெளிப்படுத்தினார்.

மார்ச் 2 திகதி வரையில் தாம் 500 வீரர்களை இழந்துள்ளதாக ரஷ்யா அறிவித்திருந்தது.

ஆனால் அதன் பின்னர் அந்த எண்ணிக்கையை ரஷ்யா புதுப்பிக்கவில்லை.

இதேவேளை இர்பின் மற்றும் புச்சா உட்பட தலைநகரின் வடமேற்கு புறநகர்ப் பகுதிகள் ஏற்கனவே பல நாட்களாக பலத்த குண்டுவீச்சுகளுக்கு உள்ளாகி வருகின்றன.

அதே நேரத்தில் ரஷ்ய கவச வாகனங்கள் வடகிழக்கு எல்லையில் முன்னேறி வருகின்றன.

Related Articles

Latest Articles