உக்ரைன் போர்: ரஷ்ய ஜனாதிபதியிடம் மோடி கூறியது என்ன?

ரஷ்ய ஜனாதிபதி புடினை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்திருக்கும் நிலையில், உக்ரைன் போரில் குழந்தைகளின் உயிரிழப்பு குறித்து புடினிடம் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்திய – ரஷ்ய உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகிறது. இம்மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மாஸ்கோ சென்றடைந்தார்.
ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இந்த சந்திப்பின்போது உக்ரைன் போரில் உயிரிழக்கும் குழந்தைகள் குறித்து மோடி கவலை தெரிவித்திருக்கிறார்.

உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் மோடி ரஷ்யா செல்வது இதுவே முதல்முறை. இந்த சந்திப்பில், ரஷ்யா இராணுவத்தில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களை விடுவிக்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் “அமைதியை நிலைநாட்ட அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்க இந்தியா தயாராக உள்ளது. அமைதி குறித்த இந்தியாவின் எதிர்பார்ப்புகளை புடினுக்கு முன் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது என்று உங்களுக்கும் உலக சமூகத்திற்கும் உறுதியளிக்கிறேன்.

வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்களுக்கு மத்தியில் அமைதி பேச்சு வெற்றியடையாது” என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

அதேவேளை, பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ள விவகாரம் தொடர்பில் அமெரிக்கா அதிருப்தி வெளியிட்டுள்ளது.

Related Articles

Latest Articles